ஓமலூர்: வேளாண், தோட்டக்கலைத்துறையில், நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பம், உழவர் நலன் காக்கும் மானிய திட்டம், வேளாண் விரிவாக்க செயல்பாடு குறித்து, நிரந்தர பயண திட்டத்தை வகுத்து களப்பணியாளர்கள், விளை நிலங்களுக்கே சென்று, விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கும் உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, காடையாம்பட்டி, குண்டுக்கல் பகுதியில், நேற்று, அத்திட்ட முகாம் நடந்தது. அதில், வேளாண் துணை இயக்குனர் சீனிவாசன்(மாநில திட்டம்) ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வேளாண் பணி குறித்து கேட்டறிந்தார். காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் நாகராஜன் உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE