சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி எரித்து கொலை: போலீஸ் தீவிர விசாரணை

Added : டிச 10, 2020
Share
Advertisement
மாரண்டஹள்ளி: வனப்பகுதியில், மர்மான முறையில், விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, சக்கிலிநத்தத்தை சேர்ந்தவர் விவசாயி அய்யப்பன், 46; இவரது மனைவி முனியம்மாள், 40. இவர்களுக்கு மணி, 25, சபரி, 23, என இரு மகன்கள் உள்ளனர். முனியம்மாளுக்கும், அவருடைய சொந்த ஊரான ஈச்சம்பள்ளத்தை சேர்ந்த ஒருவருக்கும்

மாரண்டஹள்ளி: வனப்பகுதியில், மர்மான முறையில், விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, சக்கிலிநத்தத்தை சேர்ந்தவர் விவசாயி அய்யப்பன், 46; இவரது மனைவி முனியம்மாள், 40. இவர்களுக்கு மணி, 25, சபரி, 23, என இரு மகன்கள் உள்ளனர். முனியம்மாளுக்கும், அவருடைய சொந்த ஊரான ஈச்சம்பள்ளத்தை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக, அய்யப்பனுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து, தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், விரக்தியடைந்த முனியம்மாள் கடந்த, இருமாதங்களுக்கு முன், ஈச்சம்பள்ளத்திலுள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த, 7ல் இரவு, பைக்கில் சென்ற அய்யப்பன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சக்கிலிநத்தம் அடுத்த முகுடுமடுவு வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக, மாரண்டஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற தாசில்தார் ராஜா, இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், வனவர் அருணா உள்ளிட்டோர், துர்நாற்றம் வீசிய இடத்தை தோண்டி பார்த்தனர். அதில், அய்யப்பன் அரை, குறையாக எரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், சம்பவம் குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X