பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 10, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 8ல் அணைக்கு வினாடிக்கு, 235 அடியாக இருந்த நீர்வரத்து, தொடர் மழையால் நேற்று, 484 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு, அணைக்கு வந்த தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில், பருவ மழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 8ல் அணைக்கு வினாடிக்கு, 235 அடியாக இருந்த நீர்வரத்து, தொடர் மழையால் நேற்று, 484 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு, அணைக்கு வந்த தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில், பருவ மழை போதிய அளவு பெய்யாததால், தற்போது அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அணையிலிருந்து வினாடிக்கு, 173 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், நேற்று நீர்மட்டம், 50.60 அடியாக இருந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக சூளகிரியில், 30 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இதேபோல், தேன்கனிக்கோட்டை, 16, ஓசூர், 14, தளி, 12, கிருஷ்ணகிரி, 10.4, ராயக்கோட்டை, 9, நெடுங்கல், 8.6, பாரூர், 5.4, பெனுகொண்டாபுரம், 3.2, போச்சம்பள்ளி, 3, அஞ்செட்டி, 2, ஊத்தங்கரை, 1.8 என மொத்தம், 115.4 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X