பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் கையெழுத்து விழிப்புணர்வு முகாம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.போச்சம்பள்ளியில் உள்ள, 137 வாக்குச்சாவடி மையங்களில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு டிச., 12 மற்றும், 13 ஆகிய இரண்டு நாட்களில், அந்தந்த வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அதன்படி நேற்று, போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில்,

கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.


போச்சம்பள்ளியில் உள்ள, 137 வாக்குச்சாவடி மையங்களில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு டிச., 12 மற்றும், 13 ஆகிய இரண்டு நாட்களில், அந்தந்த வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அதன்படி நேற்று, போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களுக்கு கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாசில்தார் ஆஞ்சநேயலு தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில், தேர்தல் துணை தாசில்தார் வேலு பேசியதாவது: இரண்டு நாட்கள் நடக்க உள்ள முகாமில், விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், தேர்தல் ஆணையத்தின், தீதீதீ.ஞுடூஞுஞிtடிணிணண்.tண.ஞ்ணிதி.டிண என்ற இணையதள முகவரிலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம், 6, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய படிவம், 8ல் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்து பட்டியலில் சேராதவர்கள் மற்றும் வேறு தொகுதியிலிருந்து, குடிபெயர்ந்தவர்கள் படிவம், 6, இறப்பு, வெளியூர் மற்றும் இருமுறைப் பதிவு ஆகியவற்றுக்கு படிவம், 7ஐ பூர்த்தி செய்து வரும், 15க்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், தலைமையிடத்து துணை தாசில்தார் சக்தி, மண்டல துணை தாசில்தார் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X