ஈரோடு: பொது வினியோக திட்டத்துக்காக, தஞ்சையில் இருந்து, 2,000 டன் நெல், சரக்கு ரயிலில் ஈரோடு வந்தது. பொது வினியோக திட்டத்தில் வழங்குவதற்காக, தஞ்சாவூரில் இருந்து, 42 பெட்டிகளில், 2,000 டன் நெல், சரக்கு ரயிலில் நேற்று ஈரோடு வந்தது. சுமை தொழிலாளர்கள் மூலம், நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து, அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆலைகளில் இருந்து அரிசியாக, மீண்டும் பொது வினியோக திட்ட குடோன்களுக்கு கொண்டு வரப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE