பொது செய்தி

தமிழ்நாடு

கிட்னி செயலிழந்து உயிருக்கு போராடும் சிறுவன்; மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்

Added : டிச 10, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: கொடுமுடியில், 13 வயது சிறுவனுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து, உயிருக்கு போராடுவதால், மகனை காப்பாற்ற பணம் இன்றி பெற்றோர் தவிக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 45. இவர் இங்குள்ள ஓட்டலில், சர்வராக பணிபுரிகிறார். இவர் மனைவி கீதா, 38. இவர்களுக்கு ?ஹமசந்திரிகா 18, என்ற மகளும், நிஷாந்த், 13, என்ற மகனும் உள்ளனர். நிஷாந்

மொடக்குறிச்சி: கொடுமுடியில், 13 வயது சிறுவனுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து, உயிருக்கு போராடுவதால், மகனை காப்பாற்ற பணம் இன்றி பெற்றோர் தவிக்கின்றனர்.


ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 45. இவர் இங்குள்ள ஓட்டலில், சர்வராக பணிபுரிகிறார். இவர் மனைவி கீதா, 38. இவர்களுக்கு ?ஹமசந்திரிகா 18, என்ற மகளும், நிஷாந்த், 13, என்ற மகனும் உள்ளனர். நிஷாந் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மகள் பி.காம்.,- சி.ஏ., படித்து வருகிறார். கடந்த ஓராண்டாக, நிஷாந்திற்கு உடல் எடை கூடி, பருமனாக காணப்பட்டார். இதையடுத்து, அவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தனர். உடலில் உப்பு தன்மை அதிகமாக இருப்பதாக கூறினர். அதற்காக மாத்திரை, மருந்துகள் உட்கொண்டு வந்த நிஷாந்த், அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். மீண்டும் வேறு மருத்துவரிடம், நிஷாந்தை அழைத்து சென்றபோது, தைராய்டு இருப்பதாக கூறியுள்ளனர். இதற்காக மருந்துகள் உட்கொண்டபோதும், உடல் பிரச்னை சரியாகவில்லை. மீண்டும் வாந்தி எடுத்த சிறுவன், நாளுக்கு நாள் உடல் மோசமானதை தொடர்ந்து, குடல் சம்மந்தமான மருத்துவரிடம் அணுகி, ஸ்கேன், ரத்தமாதிரி பரிசோதனை செய்துள்ளனர். அதில், இரண்டு கிட்னியும் செயலிழந்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஈரோடு, சம்பத்நகரில் ஆர்.ஏ.என்.எம். டாக்டர் மாலதி விஜயகுமார் மருத்துவமனையின், லயன்ஸ் டயாலிசஸ் சென்டரில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிறுவனுக்கு டயாலிசஸ் செய்யப்பட்டு வருகிறது. கிட்னிகளை மாற்றம் செய்து சிகிச்சை பெற, ஏழு லட்சம் ரூபாய் செலவாகும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுவரை மகனுக்காக, பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துள்ளனர். சிறுவனை காப்பாற்ற, உறவினர்கள் தங்களது கிட்னியை தானம் வழங்க முன் வந்துள்ளனர். ஆனால், பண வசதியின்றி, வறுமையில் உள்ள பெற்றோர் மகனை காப்பாற்ற தவிப்பதால், மாவட்ட நிர்வாகம், சிகிச்சை செலவிற்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுவனுக்கு உதவ நினைப்பவர்கள், நிஷாந்த்தின் பெற்றோரை, 90923-20035, 76048-71522 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X