சேலம்: வடமாநிலங்களில் உளுந்து அறுவடை தொடங்கியதால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்து, அதன் விலை, கிலோவுக்கு, நான்கு ரூபாய் சரிந்தது. தமிழகத்துக்கு தேவையான உளுந்தம்பருப்பு, மத்தியபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு, உளுந்து அறுவடை, தற்போது தீவிரமடைந்துள்ளதால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு, புது உளுந்தம்பருப்பு வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரம், மொத்த, பதுக்கல் வியாபாரிகள், பழைய உளுந்தம்பருப்பை அதிகளவில் மார்க்கெட்டுகளுக்கு அனுப்புகின்றனர். கடந்த வாரம் வரை, வாரம், 150 லாரிகளில் வந்த உளுந்தம்பருப்பு, தற்போது, 200 லாரிகளாக உயர்ந்துள்ளது. இதனால், அதன் விலை, நேற்று, கிலோவுக்கு, நான்கு ரூபாய் சரிந்தது. அதன்படி, உளுந்தம் பருப்பு முதல் ரகம் கிலோ, 128க்கு விற்றது, 124 ரூபாய், இரண்டாம் ரகம், 120க்கு விற்றது, 116 ரூபாய், மூன்றாம் ரகம், 110க்கு விற்றது, 106 ரூபாய், பர்மா ரகம், கிலோ, 98க்கு விற்றது, 94 ரூபாயாக சரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE