பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, தூத்துக்குடியில் நிறுத்தம்: மேட்டூரில் 1,010 மெகாவாட் மின்உற்பத்தி

Added : டிச 10, 2020
Share
Advertisement
மேட்டூர்: வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில், மின்உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மட்டும், 1,010 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழகத்தில், வடசென்னையில், 6 அலகுகளில், 1,830 மெகாவாட், தூத்துக்குடியில், 5 அலகுகளில், 1,050 மெகாவாட், மேட்டூரில், 5 அலகுகளில், 1,440 மெகாவாட் என, 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். 'புரெவி' புயலால்,

மேட்டூர்: வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில், மின்உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மட்டும், 1,010 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.


தமிழகத்தில், வடசென்னையில், 6 அலகுகளில், 1,830 மெகாவாட், தூத்துக்குடியில், 5 அலகுகளில், 1,050 மெகாவாட், மேட்டூரில், 5 அலகுகளில், 1,440 மெகாவாட் என, 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். 'புரெவி' புயலால், கடற்கரை அருகே உள்ள தூத்துக்குடி, வடசென்னை சுற்றுப்பகுதிகளில், சில நாளாக கனமழை பெய்தது. இதனால், அங்குள்ள அனல்மின் நிலைய வளாகத்தில் சேமித்துவைத்த நிலக்கரி ஈரமானதால், இரு இடங்களிலும், மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில், 4 அலகுகளில், 840 மெகாவாட், புது அனல்மின் நிலையத்தில், 1 அலகில், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். தூத்துக்குடி, வடசென்னையில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், மின்தேவையை சமாளிக்க, மேட்டூரிலுள்ள இரு அனல்மின் நிலையங்களில் மட்டும், இரு நாளாக, 1,010 மெகாவாட் முதல், 1,050 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X