கரூர்: செல்லாண்டிப்பாளையம் பிரிவு மற்றும் கருப்பம்பாளையம் பிரிவில், புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லாண்டிப்பாளையம் பிரிவு மற்றும் கருப்பம்பாளையம் பிரிவு பகுதிகளில், பல மாதங்களாக சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக இருந்தன. அதில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப் படுவதாக, நமது நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், செல்லாண்டிபாளையம் பிரிவு மற்றும் கருப்பம்பாளையம் பிரிவு பகுதிகளில், புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. முதல்கட்டமாக, சிமென்ட், ஜல்லிக்கற்கள் கலந்த கலவை கொட்டப்பட்டுள்ளது. இன்னும், இரண்டொரு நாளில் தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால், சுற்றுவட்டார பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE