பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதியில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மாயனூருக்கு வரத்து அதிகரிப்பு

Added : டிச 10, 2020
Share
Advertisement
கரூர்: மழை காரணமாக, அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது. இந்நிலையில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த, 6 முதல் ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை,

கரூர்: மழை காரணமாக, அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது. இந்நிலையில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த, 6 முதல் ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை, அணையில் இருந்து, 5,625 கன அடி தண்ணீர் ஆற்றிலும், 334 கன அடி தண்ணீர் புதிய வாய்க்காலிலும் திறக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் மழைபெய்து வருவதால், திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு, 2,646 கன அடி, புதிய வாய்க்காலில், 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.51 அடியாக இருந்தது. வினாடிக்கு அணைக்கு, 2,809 கன அடி தண்ணீர் வந்தது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம், 9,862 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 14 ஆயிரத்து, 464 கன அடியாக அதிகரித்தது. இதனால், டெல்டா பாசன பகுதிகளுக்கு, காவிரியாற்றில், 14 ஆயிரத்து, 314 கன அடியும், மூன்று பாசன கிளை வாய்க்காலில் தலா, 50 கன அடி வீதம், 150 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணை பகுதிகளில், 16 மி.மீ., மழை பெய்துள்ளது.


* க.பரமத்தி அருகே உள்ள, ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 32 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 26.07 அடியாக இருந்தது. இன்று அல்லது நாளை, ஆத்துப்பாளையம் அணை நிரம்பும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை விபரம் (மி.மீ.,): கரூர், 15.4, அரவக்குறிச்சி, 1, அணைப்பாளையம், 7, க.பரமத்தி, 14.6, குளித்தலை, 4.2, தோகமலை, 2, கிருஷ்ணராயபுரம், 12.2, மாயனூர், 16, பாலவிடுதி, 18, மயிலம்பட்டி, 7 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 8.68 மி.மீ., மழை பதிவானது. நேற்று கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பனியின் காரணமாக, வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X