பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளிகள் ஸ்கூட்டர் வரும் 15ல் நேர்முக தேர்வு

Added : டிச 10, 2020
Share
Advertisement
கரூர்: 'மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டருக்கு, வரும், டிச.,15ல் நேர்முக தேர்வு நடக்கிறது' என, கரூர் கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக, 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுயதொழில் புரிபவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

கரூர்: 'மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டருக்கு, வரும், டிச.,15ல் நேர்முக தேர்வு நடக்கிறது' என, கரூர் கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக, 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுயதொழில் புரிபவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, கைகள் இரண்டும் நல்ல நிலையில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டருக்கு, வரும், 15ல் கலெக்டர் அலுவலகம், அறை எண்-007, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நேர்முகத் தேர்வு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள், தேவையான ஆவணங்களுடன் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X