கரூர்: கரூர்- திருச்சி பிரதான சாலையோரம், நடமாடும் பார்களாக மாறி விட்டது.
கரூர் மாவட்டத்தில், 96 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் இயங்கும் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது பிரியர்கள், சாலையோரங்களில் இடம் பிடித்து மது குடிக்கின்றனர். குறிப்பாக, கரூர் -திருச்சி சாலை, காந்தி கிராமம் அருகில் மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் எதிரில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இங்கு, சாலையோரம் குடிப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: கடந்த, ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இங்கு செயல்பட்டது. அப்போது, பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகினர். 2018ல் நீதிமன்ற உத்தரவுப்படி கடை மூடப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, சில மாதங்களில் திறக்கப்பட்டது. அருகில், தாபா ஓட்டலில் சட்ட விரோதமாக மது அருந்தி வந்தனர். தற்போது, சாலையோரம் மது அருந்துகின்றனர். இதனால், பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை சாலையில் வீசுகின்றனர். இதுமட்டுமல்லாது, சங்கிலி பறிப்பு போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்களின், புகலிடமாகவும் மாறி விட்டது. மது அருந்தி விட்டு, வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE