பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

Added : டிச 10, 2020
Share
Advertisement
நாமக்கல்: அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்

நாமக்கல்: அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வித்திட்டத்தின் கீழ், எவ்வித நிபந்தனையும் இன்றி, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, பெற்றோரது ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை, அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும், வரும், 10 முதல், 31 வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X