பொது செய்தி

தமிழ்நாடு

போஸ்டல் அசிஸ்டன்ட் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி

Added : டிச 10, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போஸ்டல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு, ஆன்லைனில் இணையதளம் மேடை வாயிலாக அளிக்க, உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு, 2021, ஏப்., 12 முதல், 24 வரை நடக்கிறது. https://ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்,

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போஸ்டல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு, ஆன்லைனில் இணையதளம் மேடை வாயிலாக அளிக்க, உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு, 2021, ஏப்., 12 முதல், 24 வரை நடக்கிறது. https://ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18 முதல், 27 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித்தேதி, டிச., 15. இத்தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு, வரும், 16 முதல், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்குகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களின் பெயர், கல்வித் தகுதி, வாட்ஸ் ஆப் நம்பர் உள்ளிட்ட விபரங்களை, onlineclassnkl@mail.com என்ற மின்னஞ்சலிலோ, 04286- 222260 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X