நாமக்கல்: தூய்மை இந்தியா திட்டம் சார்பில், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், கழிவுநீர் வாகனம், புதை வடிகால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தலைமை வகித்து பேசியதாவது: வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்காக, நாமக்கல் நகராட்சியில் கழிவு நீர் அகற்றும் வாகனம் மற்றும் ராஜா, கஸ்தூரி என்ற இரண்டு தனியார் நிறுவன செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் கழிவுநீர் தொட்டிகளை வாகனம் மற்றும் இயந்திரங்கள் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் யாரும் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பணி செய்யக்கூடாது. மீறி இறங்கி பணிசெய்யும் போது ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படின் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரே பொறுப்பு என்பதனுடன், வீட்டு உரிமையாளர் மீது கொலை வழக்கும் தொடரப்படும். எனவே, பொது மக்கள், நகராட்சி கழிவு நீர் வாகனம் மொபைல் எண்களான, 9994244448, 9894807886 மற்றும் தனியார் செப்டிக் டேங் வாகன மொபைல் எண்களான, 98428 31053 மற்றும் 98653 23890 எண்களை தொடர்பு கொள்ளாலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE