பொது செய்தி

இந்தியா

ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடி சொத்துகளை அடமானம் வைத்துள்ள நடிகர்

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
மும்பை: ஏழைகளுக்கு உதவுவதற்காக நடிகர் சோனு சூட், தனது 8 சொத்துகளை ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அமலானதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்தசமயத்தில், நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில், புலம்பெயர் தொழிலாளர்களை
SonuSood, Mortgaged, 8Properties, Mumbai,சோனுசூட், அடமானம், ஏழைகள், உதவி

மும்பை: ஏழைகளுக்கு உதவுவதற்காக நடிகர் சோனு சூட், தனது 8 சொத்துகளை ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அமலானதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்தசமயத்தில், நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில், புலம்பெயர் தொழிலாளர்களை சிறப்பு பஸ், விமானங்களில் அனுப்பி உதவி செய்தார். மேலும், ரஷ்யா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தவித்த மாணவர்களையும் இந்தியாவுக்கு சொந்த செலவில் விமானங்களில் அழைத்து வந்தார். இவரின் சேவையை பலரும் பாராட்டினர்.


latest tamil news


அதுமட்டுமல்லாமல், ஏழை பெண்களுக்கு டிராக்டர் வழங்குதல், அறுவை சிகிச்சை செய்ய கோரிக்கை வைத்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தல் உள்ளிட்ட பல உதவிகளை தன்னலம் பாராமல் செய்த சோனு சூட்டிற்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது சொத்துகளை அடமானம் வைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சோனு சூட் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகள் என 8 சொத்துக்களை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்றும், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் இருந்து 10 கோடி ரூபாய் லோன் வாங்க கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி நவம்பர் 24ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
10-டிச-202020:43:43 IST Report Abuse
Swaminathan Chandramouli இவருடைய தன்னலம் கருதாத உதவிகளுக்கு இவரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை இவருக்கு பத்ம விபூஷண் பட்டம் கொடுக்கவேண்டும்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-டிச-202020:35:01 IST Report Abuse
Rajagopal யோ கமலு பாருய்யா பாரு. வறுமையின் நிறம் சிவப்புன்னு படம் பண்ணி பணம் சம்பாதிச்சி வசதியா இருந்தல்ல? இப்ப எறங்கி வா பாப்போம். இந்த அய்யாவப் பாரு. தன்னோட சொத்த அடமானம் வைக்காரு. யோ சூரியா பெரிஸ்சா கண்ணீருல்லாம் வடிச்சல்ல? இந்த அய்யா மாதிரி செய்வியா? செஞ்சி காட்டு. அப்பால சனங்க ஒன்னிய கும்புடுவாங்க. புரச்சிதலைவரு சும்மா நடிச்சி எல்லாரையும் ஏமாத்தல தெரிஞ்சிக்க. அவரு உண்மையிலேயே அள்ளி அள்ளிக் குடுத்தாரு. எத்தனையோ பேருக்கு ஒதவி செஞ்சாரு. ஒரு தரம் கூட அத சொல்லிக் காட்டிக்கிடல. அதனாலதான் சனங்க அவர தெய்வம் மாதிரி நெனச்சங்க. இந்த மனுசங்க செய்ற மாதிரி நூறுல ஒரு பங்காவது செஞ்சிக் காட்டுங்க பாப்போம். ரஜனி பல பேருக்கு ஒதவி செஞ்சிருக்காரு. ஒங்கள மாதிரி இல்ல தெரிஞ்சிக்கிடுங்க. அதுதான்யா ஆன்மீக அரசியல்.
Rate this:
M Ramachandran - Chennai,இந்தியா
10-டிச-202023:45:08 IST Report Abuse
M  Ramachandranநல்ல மனம் படைத்தவர் அவர் கஷ்டப்படக்கூடாது....
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-டிச-202020:07:56 IST Report Abuse
Sanny இங்கே பலர் பாராட்டுகிறார்கள், இவர் செய்யும் உதவிகளுக்கு பணமுள்ளவர்கள் நன்கொடை அளித்தால் சிறப்பாக இருக்கும், சோனு சார் ஒரு சொல்லு சொல்லுங்க, உங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு ஆஸ்திரேலியாவில், உங்களின் சேவைக்கு நன்கொடை அளிக்க தயாராக இருக்கிறார்கள். உங்களை தவறாக எடைபோட்டு சொல்லவில்லை, நீங்கள் மற்றவர்களுக்காக வட்டிக்கு பணம் எடுக்கும்போது, நல்லமனசுகள் ஏங்காமல் சும்மா இருக்க முடியுமா? ஒரு அறக்கட்டளையை ஆரம்பிங்க பணம் அனுப்புவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X