திருவல்லிக்கேணி - திருவல்லிக்கேணியில், வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாதபடி, நீர்நிலைகளுக்கு அருகே உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில், ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட, எஸ்.எம்.நகரில், கூவம் ஆற்றிற்கு அருகே உள்ள, 1,250 குடியிருப்புகளை அகற்றிய மாநகராட்சியினர், அங்கு குடியிருந்தவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், மீதமுள்ள, 350 குடியிருப்புகளை அகற்ற, நேற்று சென்றனர். அப்போது, அப்பகுதி மக்கள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பலத்த எதிர்ப்பிற்கு நடுவே, அரசு உத்தரவின் படி, மாநகராட்சி ஊழியர்கள், தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE