மொடக்குறிச்சி : இரண்டு கிட்னிகளும் செயலிழந்து, உயிருக்கு போராடும் மகனை காப்பாற்ற பணமின்றி, பெற்றோர் தவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 45; ஓட்டலில், பணிபுரிகிறார். மனைவி கீதா, 38. மகன் நிஷாந்த், 13, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த ஓராண்டாக, நிஷாந்திற்கு உடல் எடை கூடி, அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். மருத்துவ பரிசோதனையில், சிறுவனது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
லயன்ஸ் டயாலிசிஸ் சென்டரில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, சிறுவனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.கிட்னி மாற்றம் செய்து, சிகிச்சை பெற, 7 லட்சம் ரூபாய் செலவாகும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுவரை பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, செலவு செய்துள்ளனர். சிறுவனை காப்பாற்ற, உறவினர்கள், கிட்னி தானம் வழங்க முன் வந்துள்ளனர்.சிகிச்சையை தொடர, பண வசதியின்றி பெற்றோர் தவிப்பதால், 'அரசு உதவி செய்ய வேண்டும்' என, வேண்டு கோள் விடுத்து உள்ளனர். உதவ, 90923 20035 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE