5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை| Dinamalar

5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (14)
Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான விஞ்ஞானிகள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் கொரோனா அறிகுறியுள்ள ஒருவரின் மாதிரிகளை சேகரித்து ஆர்.என்.ஏ., அடிப்படையிலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பை மருத்துவர்கள் உறுதி
IndianOrigin, Scientist, PaperBasedTest, Detect, Covid, 5Minutes, இந்திய வம்சாவளி, விஞ்ஞானி, கொரோனா, பரிசோதனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான விஞ்ஞானிகள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் கொரோனா அறிகுறியுள்ள ஒருவரின் மாதிரிகளை சேகரித்து ஆர்.என்.ஏ., அடிப்படையிலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் காகித அடிப்படையிலான சோதனை மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிலும், 5 நிமிடங்களில் முடிவுகளை அறிய முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை உருவாக்கினர். இதை பயன்படுத்தி, கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும் பரிசோதித்தனர். அதில், கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது. இது, கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X