மதுரை : விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு மதுரை காந்தி மியூசியத்தில் 'ரியல் ஹீரோ' விருது வழங்கப்பட்டது
.மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் மத்திய அரசின் சுகாதார துறை மீடியா அட்வைசர் அமர் பிரசாத் ரெட்டி, தொழிலதிபர் சூரத் சுந்தர சங்கர், நேஷனல் யூத் கவுன்சில் ஆஃப் இந்தியா செயலர் தட்சணாமூர்த்தி, டி.எஸ்.பி., ஓய்வு சுப்புராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பூபதி ஆகியோர் 26 வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
இணையவழி உடற்பயிற்சியில் உலக சாதனை நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த அலங்காநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்விஆசிரியர் காட்வின் வேதநாயகம் பாராட்டப்பட்டார். தடகள பயிற்சியாளர் ரஞ்சித்குமார் ஏற்பாடுகளை செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE