மதுரை : மதுரை ஆவின் நடத்திய எழுத்து தேர்வுக்கு கீ ஆன்சர் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆவினில் இளநிலை உதவியாளர் முதல் துணை மேலாளர் உட்பட 62 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நவ.,22ல் நடந்தது. தேர்வுக்கான வினாத்தாளை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர்கள் குழு தயாரித்தது. அக்குழு மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது.
தேர்வு எழுதியோர் கூறியதாவது:
தேர்வில் பெறும் மதிப்பெண்களின்படி நேரடியாக நியமனம் நடக்கவுள்ளது. நேர்காணலுக்கு பொது மேலாளர் தலைமையில் குழு அளிக்கும் மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்பணியிடங்களுக்கு புரோக்கர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ள சர்ச்சை எழுந்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டிலும் முறைகேடுக்கு வாய்ப்புள்ளது.நவ., 28, 29 ல் மத்திய கூட்டுறவு வங்கி நடத்திய எழுத்து தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது.ஆவின் தேர்வுக்கும் கீ ஆன்சர் வெளியிட வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE