விவசாயிகள் போராட்டத்தை இந்திய - பாக்., பிரச்னை எனக்கூறிய போரிஸ் ஜான்சன்

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
லண்டன்: டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக, இங்கிலாந்து பார்லி.,யில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை என தவறாக பதில் அளித்தது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடா பிரதமர்
BritainPM, BorisJohnson, FarmersProtest, Confuses, IndiaPakistan, பிரிட்டன், பிரதமர், போரிஸ் ஜான்சன், விவசாயிகள் போராட்டம், இந்தியா பாகிஸ்தான் பிரச்னை

லண்டன்: டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக, இங்கிலாந்து பார்லி.,யில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை என தவறாக பதில் அளித்தது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். இதற்கு இந்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது. இ

ந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை இந்திய பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்துமாறு இங்கிலாந்தின் எதிர்க்கட்சி எம்.பி.,யும், சீக்கியருமான தன்மன்ஜீத் சிங் தேசி, பார்லிமெண்டில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்தார்.


latest tamil news


இது தொடர்பாக பேசிய போரிஸ் ஜான்சன், ‛விவசாயிகள் பிரச்னையை இந்தியா-பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்னை,' என தவறுதலாக பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், 'இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து எங்களுக்கு தீவிர கவலைகள் உள்ளன. ஆனால் இவை அனைத்துக்கும் இரு அரசுகளும் தீர்வுகாண முன்வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான எந்த பிரச்னையையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு' எனக்கூறினார்.


latest tamil news


இதனால் அதிர்ச்சியடைந்த தேசி, பிரதமர் போரிஸ் ஜான்சனை தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியிருந்தார். அவர் பதிவிட்டதாவது: 'இந்தியாவில் வேளாண் சட்டங்கள் பற்றி அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தியதை கண்டு பலரும் அச்சமடைந்தனர். அகிம்சையாக போராடுவது அனைவரின் அடிப்படை உரிமையாகும். நமது பிரதமர் என்ன பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்திருந்தால், நன்றாக இருக்கும்' என அதில் கூறியிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Chennai,இந்தியா
10-டிச-202022:36:45 IST Report Abuse
Saravanan வழக்கமாக இந்திய பாக் பிரச்னையை எழுப்புவதால் ஒரே மாதிரியான பதிலை தவறாக கூறி விட்டார். இது அவரது நாட்டில் நடப்பது அல்ல. மேலும் எதிர் கட்சி தலைவர் பதிலை பெறும்போது எதிர்க்காமல் டுவிட்டர் இல் பதிவிடுவது அநாகரிகம்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
10-டிச-202021:55:11 IST Report Abuse
bal அந்த சீஐக்கியனை உதைக்காணும்...இந்தியா பிரச்னைக்கு அங்கு என்ன பேச்சு...இந்த சீக்கியன் ஏன் இந்தியாவிற்கு உதவி பண்ணலை.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
10-டிச-202020:47:22 IST Report Abuse
Arul Narayanan They are not protesting peacefully. They have blocked the entry points of Delhi. Rafi, Riyadh says Bandh observed by farmers was successful, but it was observed by opposition parties, not by farmers except farmers of Punjab and Haryana. Refer the results of Rajasthan Panchayat elections.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X