7 ஆண்டு சிறை; ரூ.10 லட்சம் அபராதம்: கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம்

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம், நேற்று(டிச.,09) இரவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டப்படி குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.பா.ஜ., ஆளும் கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று பசுவதை தடுப்பு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Karnataka, Cow Slaughter Law,  Jail, Fine, சிறை, அபராதம், கர்நாடகா, பசுவதை தடுப்பு சட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம், நேற்று(டிச.,09) இரவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டப்படி குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ., ஆளும் கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று பசுவதை தடுப்பு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. பின்னர், கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவால், பசு மாடுகளை சட்டசபை வளாகத்திற்கு வரவழைத்து கோ பூஜை நடத்தினார். இதன் பின்னர் நேற்று இரவு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சட்டப்படி பசுக்களை கொல்வதற்கும், மாட்டிறைச்சியை கடத்துதல், சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுக்களை கொல்பவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். தொடர்ச்சியாக இந்த குற்றத்தில் ஈடுபட்டு சிக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். கடத்தல், விற்பனை, வாங்குபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.


latest tamil news



வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கவும், சோதனை நடத்த போலீசாருக்கு அதிகாரம் அளிக்கவும் கர்நாடகா அரசு இயற்றிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குஜராத், உ.பி., மாநிலங்களை தொடர்ந்து, கர்நாடகாவும் பசுவதைக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-டிச-202012:06:31 IST Report Abuse
Malick Raja அதென்ன கோமாதாவை தொழுவத்தில் கட்டிவைத்து பால்கறப்பது, குடிப்பது.. கன்றுக்குட்டிக்கு உள்ள பாலை மனிதர்கள் எப்படி குடிக்க முடியும்.. எனவே கோமாதாவை தொழுவத்தில் கட்டி வைப்பவர்களுக்கு பால்குடிப்பவர்களுக்கும் தண்டனை கொண்டுவர வேண்டும். இவர்கள் மட்டும் வீட்டிலாம்.. கோமாதா தொழுவத்திலிருக்குமாம் ..எண்ணெங்கடா நியாயம் .. உடனடியாக மூக்கு கயிறுகள் நீக்கப்பட வேண்டும்..கோமாதாவை கட்டிவைக்க தடைவிதிக்க வேண்டும் .. கடவுளை கட்டிப்போடலாமா? இதற்கும் சட்டம் இயற்றவேண்டும் ஆமா ..
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
10-டிச-202020:38:37 IST Report Abuse
அறவோன் என்னங்கடா, மற்ற உயிரினங்களை வதம் செய்ய சட்டம் போட்டிருக்கிறான்கள்
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
10-டிச-202018:48:48 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை உங்கள் கட்சி ஆளுங்கள முதல்ல சட்டத்தை மதிக்க சொல்லுங்க.
Rate this:
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
10-டிச-202020:15:13 IST Report Abuse
வல்வில் ஓரிஆமையன் எந்த சட்டத்துல இலங்கைக்கு கள்ள தோனியில் போனானாம்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X