புதிய பார்லி., கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் வளாகத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.டில்லியில் உள்ள, பார்லிமென்ட் கட்டடம், கடந்த, 1927ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லி கட்டடத்தை கட்ட, மத்திய அரசு திட்டமிட்டது. பழைய கட்டடத்துக்கு அருகிலேயே,

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் வளாகத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.



latest tamil news



டில்லியில் உள்ள, பார்லிமென்ட் கட்டடம், கடந்த, 1927ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லி கட்டடத்தை கட்ட, மத்திய அரசு திட்டமிட்டது. பழைய கட்டடத்துக்கு அருகிலேயே, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
1,608 எம்.பி.,க்கள் பங்கேற்கும் வகையில் கட்டப்பட உள்ளது. லோக்சபாவில் 888 எம்.பி.,க்கள் அமரும் வகையிலும் ( இதனை 1,224 பேர் வரை அதிகரித்து கொள்ளலாம்) 384 ராஜ்யசபா எம்.பி.,க்கள் அமரும் வகையிலும் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம், 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும், 2022ல், புதிய பார்லி கட்டடம் தயாராகிவிடும் .


latest tamil news



இந்நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. புரோகிதர்கள் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ், தொழிலதிபர் ரத்தன் டாடா, வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news



தொடர்ந்து, ஜெயின், புத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மத குருமார்கள், விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rathish - chennai,இந்தியா
10-டிச-202022:50:21 IST Report Abuse
rathish நாடாளுமன்றம் பல கோடிகள் வரிப்பணம் வீண்
Rate this:
Cancel
10-டிச-202015:36:27 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) எல்லா மதங்களிலும் உள்ள நல்லவர்கள் மோடிஜி அவர்களை வாழ்த்துவார்கள்.
Rate this:
Cancel
10-டிச-202015:35:46 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இந்தியாவுக்கு நல்ல மாற்றம் கொடுத்த மோடிஜிக்கு நன்றி தமிழகத்துக்கு மாற்றம் கொடுக்கப்போகும் ரஜினி அவர்களுக்கும் நன்றிகள் பல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X