புதுடில்லி: பழங்காலத்தில் ஜனநாயகம், மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்ததாக தெரிவித்த பிரதமர் மோடி, 10ம் நூற்றாண்டில் பஞ்சாயத்து அமைப்புகளை சோழ மன்னர்கள் ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: புது பார்லிமென்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இன்றைய நாள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. புது பார்லிமென்ட்டை மக்கள் அனைவரும் இணைந்து கட்டுவோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பார்க்கும் 130 கோடி இந்தியர்களுக்கும் பெருமையாக இருக்கும். புதிய மற்றும் பழைய பாரம்பரியத்தை கொண்டதாக புதிய கட்டடம் இருக்கும். காலம் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் முயற்சியாகும்.
2014ல் எம்.பி.,யாக முதல்முறை பார்லிமென்டிற்கு வந்த நிகழ்வை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஜனநாயகத்தின் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னர், எனதுதலைவணங்கி, ஜனநாயகத்தின் கோயிலுக்கு சல்யூட் செய்தேன். வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை பழைய பார்லிமென்ட் பார்த்துள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை பார்த்துள்ளது.100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓய்வு தேவைப்படுகிறது.புது இந்தியாவுக்கு புதிய பார்லிமென்ட் தேவைப்படுகிறது.
எம்.பி.,க்களுக்கு ஏராளமான வசதிகள் புதிய பார்லிமென்டில் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் எம்.பி.,க்கள் எளிதாக கலந்துரையாட முடியும்.சுய சார்பு இந்தியாவிற்கு சாட்சியாக புது பார்லிமென்ட் கட்டடம் இருக்கும்.புது இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் இருக்கும்.

பழங்கால இந்தியாவில் மக்கள் பார்லிமென்டிற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 10ம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியில் பஞ்சாயத்து அமைப்பு இருந்தது.தமிழக கிராமங்களில் இன்னும் 10ம் நூற்றாண்டை சேர்ந்த மஹா சபாக்கள் உள்ளன. 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள், வேட்டாளர்களை தகுதி நீக்கம் செய்தது குறித்து பேசுகிறது.பழங்கால இந்தியாவில், வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஜனநாயகம் இருந்து. ரிக் வேதத்தில் ஜனநாயகம் குறித்த குறிப்புகள் இருந்தன
ஜனநாயகத்தின் சக்தி, இந்தியா வளர்ச்சிக்கு உதவும்.மற்ற ஜனநாயகங்களில் ஓட்டு எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்று அதிகரித்து வருகின்றனர். வெவ்வேறான கருத்துகள், ஜனநாயகத்தை துடிப்பானதாக மாற்றுகிறது. ஜனநாயகத்தில் பேச்சுவார்த்தை என்பது முக்கியம் என குருநானக் கூறியுள்ளார். நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், மக்கள் சேவையில் வேறுபாடு இருக்கக்கூடாது.
மக்களுக்கும் அரசியல்சாசனத்திற்கும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும்.புதிய பார்லிமென்டின் ஆன்மாவாக புதிய எம்.பி.,க்கள் இருப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE