மே.வங்கத்தில் பாஜ., தலைவர் கார் மீது கல்வீசி தாக்குதல்

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
கோல்கட்டா: பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செல்கையில் அவரது வாகனம் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இதற்கு பாஜ.,வினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.மேற்குவங்கத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அரசியல் கட்சியினர் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. பா.ஜ., தேசிய தலைவர்
BJP, WestBengal, JPNadda, Convoy, Attack,

கோல்கட்டா: பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செல்கையில் அவரது வாகனம் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இதற்கு பாஜ.,வினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அரசியல் கட்சியினர் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அவரின் வாகனத்தை மறிக்க முற்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பு வாகனத்தில் பா.ஜ., எதிர்ப்பாளர்கள் சிலர், கற்களை வீசி தாக்கினர். இதில், ஒரு வாகனத்தில் வந்த பாஜ., தலைவர்கள் தீபஞ்சன் குஹா, கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோரின் காருக்குள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கற்கள் வந்து விழுந்தன. இந்த சம்பவத்திற்கு பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து கைலாஷ் விஜயவர்ஜியா கூறுகையில், ‛இந்த தாக்குதலில் நான் காயமடைந்துள்ளேன். கட்சித் தலைவரின் காரும் தாக்கப்பட்டது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். போலீசார் முன்னிலையில், குண்டர்கள் எங்களை தாக்கினர். நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இல்லை என்பது போல் உணர்ந்தோம்.' என்றார்.


latest tamil news


பாஜ., தேசிய தலைவர் நட்டா கூறியதாவது: எங்களது ஒரு கார் விடாமல் அனைத்து கார்களும் தாக்கப்பட்டுள்ளன. நான் குண்டு துளைக்காத காரில் பயணம் செய்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன். மேற்கு வங்கத்தில் இந்த சட்டவிரோதம் மற்றும் சகிப்பின்மை முடிவுக்கு வர வேண்டும். இந்த தாக்குதலில் முகுல் ராய் மற்றும் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோர் காயமடைந்தனர். இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம். 2021ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பா.ஜ., அடுத்த அரசாங்கத்தை அமைக்கும், தாமரை மலரும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
11-டிச-202007:32:37 IST Report Abuse
sridhar மம்தா கட்சி கல் எரிந்ததை கண்டிக்கும் வாசகர்கள் அதற்கு காரணமான பிஜேபி கட்சியின் செயல்களை கண்டிப்பார்களா? மக்களை சந்திப்பது , குறைகள் கேட்பது , Bangladesh மூர்க்கன் கள்ள குடியேற்றத்தை எதிர்ப்பது என்று செய்வது நியாயமா .
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
11-டிச-202007:25:04 IST Report Abuse
Balaji அநியாயம். அராஜகம். நாட்டை ஆளும் பலம் வாய்ந்த ஒரு கட்சியின் தேசிய தலைவருக்கு இந்த நிலைமை.. இது எந்த வகையில் சேரும் என்று விளங்கவில்லை. வெறுப்பு அரசியலின் உச்ச கட்டம். இதே போலத்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் மோடி வரும் போதெல்லாம் இந்த தேசத்தின் பிரதமர் என்கிற ஒரு சாதாரண உணர்ச்சி கூட இல்லாமல் கறுப்புக்கொடி காட்டுவது. இது தான் ஜனநாயகமா? மன்னராட்சியில் தான் இப்படிப்பட்ட வெறுப்பு உமிழும் அரசியல் நடக்கும்... அசிங்கம்...
Rate this:
Cancel
Nepolian s -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-202004:51:18 IST Report Abuse
Nepolian s நாடு முழுவதும் பரவட்டும் பாஜாவுக்கு எதிரான கிளர்ச்சி.... தரமான சம்பவம்...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
11-டிச-202012:33:18 IST Report Abuse
Balajiகனவா நண்பரே? கிளர்ச்சிக்கு ரவுடி தனத்திற்கும் வித்தியாசம் தெரியாதோ? வெட்கக்கேடு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X