மொபைல் எண்களுடன் 70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் அம்பலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மொபைல் எண்களுடன் 70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் அம்பலம்

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (10)
Share
ஜெய்பூர்: கிரெட், டெபிட் கார்டு வைத்துள்ள 70 லட்சம் இந்தியர்களின் வருமானம், தொலைபேசி எண்கள், பான் என்கள், வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றுடன் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜ்சேகர் ராஜாரியா. டார்க் வெப்பில் இவர் கூகுள் டிரைவ் இணைப்பு ஒன்றை இந்த மாதம் கண்டுபிடித்தார். டார் வெப் என்பது சிறப்பு

ஜெய்பூர்: கிரெட், டெபிட் கார்டு வைத்துள்ள 70 லட்சம் இந்தியர்களின் வருமானம், தொலைபேசி எண்கள், பான் என்கள், வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றுடன் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.latest tamil newsராஜஸ்தானைச் சேர்ந்தவர் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜ்சேகர் ராஜாரியா. டார்க் வெப்பில் இவர் கூகுள் டிரைவ் இணைப்பு ஒன்றை இந்த மாதம் கண்டுபிடித்தார். டார் வெப் என்பது சிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய இணையம் ஆகும். பயனர் யார், இணையதள ஆபரேட்டர் யார் என்பதெல்லாம் இதில் ரகசியமாக இருக்கும். பெரும்பாலான சைபர் குற்றங்களுக்கு இந்த டார்க் வெப் உதவுகிறது. இதில் ராஜ்சேகர் கண்டுபிடித்த இணைப்பில் 70 லட்சம் இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் தொலைபேசி எண்களுடன் உள்ளதாக கூறியுள்ளார்.

59 எக்செல் கோப்புகளை கொண்ட அந்த தொகுப்பில் முழு பெயர்கள், மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரி, நகரங்கள், வருமான நிலைகள் மற்றும் அட்டைதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட தரவுகள் உள்ளன. மேலும் அவர்களின் பான் கார்டு எண்கள், அவர்கள் பணியாற்றும் நிறுவன விவரங்கள், எந்த வகையான வங்கி கணக்கு போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் ஒரே அதிர்ஷ்டவசமான விஷயம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கு எண் விவரங்கள் இல்லை என கூறியுள்ளார். ஆனாலும் முதலில் அட்டையை பயன்படுத்தி செலவழித்த தொகை பதிவாகியுள்ளது.


latest tamil newsஇத்தகவல் அனைத்தும் பெரு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களுடையது. அவர்களில் பெரும்பாலானோர் இணைய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என மற்றொரு சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'வை ஜங்கிள்' நிறுவன சி.இ.ஓ., கர்மேஷ் குப்தா தெரிவித்தார். இது பெரும்பாலும் 2010 முதல் 2019-ம் ஆண்டின் தொடக்கம் வரையிலான தகவல்கள். இதே போல் கடந்த ஆண்டு 13 லட்சம் பேரின் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X