கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக ஆட்சி எப்போது வருமென மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.கோவையில் திமுக ஆட்சியில் துவக்கப்பட்ட மேம்பால பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதுநொய்யல் ஆறு மிகவும் மாசுபட்டுள்ளது.நொய்யல் புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் என்ன பணிகள் நடைபெறுகிறது என யாருக்கும் தெரியவில்லை.குடிமாரத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.அதிமுக ஆட்சி திறமையில்லாத ஆட்சிகோவை மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதிமுகவினருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளனர்.
தேவையற்ற தனிப்பட்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானது அல்ல. அதனை துவக்கி வைத்தது அதிமுக..ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் பெண்களுக்கு வழங்குவது குறித்த ஒ.பன்னீர்செல்வம் கருத்திற்கு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதுகுறித்து முடிவெடுக்கட்டும்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை குறித்த மாறுபட்ட நிலைப்பாட்டினால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE