அமராவதி: வாகனத்திற்கான சுங்க வரியை கேட்ட டோல்கேட் ஊழியரை அறைந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவியின் செயல்இணைய தளத்தில் வரைவலாகி வருகிறது.
![]()
|
ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (யுவஜனா ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ்) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் குண்டூர் பகுதி தலைவராக இருந்து வருபவர் தேவல்லா ரேவதி . இவர் வதேரா நகராட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று தனது தயாரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக குண்டூரில் இருந்து விஜயவாடாவிற்கு காரில் சென்றார். காஜா டோல்கேட்டில் இவரின் காருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் கூறினர்.
இதனால் கோபம் அடைந்த அவர் தடுப்புகளை அகற்றும் படி ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஊழியர்கள் யாரும் செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து அவரே காரில் இருந்து இறங்கி தடுப்புகளை அகற்றியதுடன் அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இச்சம்பம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தேவல்லா ரேவதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சில ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர். பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்களும் கோரி வருகின்றனர்.
![]()
|
இதனிடையே தேவல்லா ரேவதி அளித்துள்ள தன்னிலை விளக்கத்தில் உண்மையான சம்பவம் மறைக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்துவினாடி கிளிப்பிங் மட்டும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுவதாகவும் கூறி உள்ளார். எனது தயாரை விஜயவாடாவில்உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். கடந்த10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன்.
குண்டூர் மாவட்ட பின் தங்கிய வகுப்பு தொழிற்சங்க தலைவராக பணியாற்றி உள்ளேன் அதுமட்டுமல்லாது என்னிடம் உள்ளூர் பதிவு அட்டைமற்றும் இலவச பாஸ் உள்ளது.அவசரகால வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஆணையம் கூறுகிறது.அவசரநிலை என்பதால் எனக்கு விலக்கு அளிக்குமாறு டோல் பிளாசா ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டேன்.நான் கட்டணம் செலுத்தவில்லை என்று எனக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்படுவதை கண்டிக்கிறேன் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement