கோவை:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் வேகமாக நிறைவடைய வேண்டும் என்ற வேண்டுதலை முன்னிறுத்தி அகோரிகள், சாதுக்கள், சன்னியாசிகள் மநாடுமுழுக்க மேற்கொண்ட பயணத்தில் கோவையை வந்தடைந்தனர் .அவர்கள் நாளை வெள்ளிங்கிரி மலைக்கு செல்கின்றனர்.
ராமஜென்ம பூமியிலிருந்து ராமர் கோவில் கட்டி முடிவடைந்து கும்பாபிஷேகம் மற்றும் கும்பமேளா விரைவில் நடைபெறுவதற்கு அயோத்தியிலிருந்து பாபாநாகா அகோரிகள் மற்றும் சாதுக்கள், சன்னியாசிகள் நாடுமுழுக்க உள்ள, 108 வைணவ திவ்யதேசங்களையும் முக்கிய கோவில்களிலும் வழிபாட்டு தலங்களிலும் தரிசனம் மேற்கொண்டு, சங்கல்பம் செய்வதற்காக, 90 நாட்களுக்கு மேல் சைக்கிள் பயணம் துவங்கி டிச.,8 அன்று கேரள மாநிலம் வழியாக தமிழகத்திற்கு வந்தனர்.
தமிழக கேரள எல்லையான வாளையாறு, க.க.சாவடி வழியாக கோவை நகருக்குள் வந்தனர். கோவை வந்த சாதுக்கள், சன்னியாசிகள், அகோரிகளுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் நாமசங்கீர்த்த இசைக்குழுவோடு சென்று மாலையணிவித்து மரியாதை செய்து அழைத்து வரப்பட்டார்.
இது குறித்து அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இவர்கள் பங்கேற்றனர். ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொய்வின்றி நிறைவடைய வேணடும். கும்பமேளா நடைபெற வேண்டும். அதை மையப்படுத்தி, இந்தியாவிலுள்ள, 108 வைணவ திவ்யதேவசங்களுக்கும், ஜோதிர் லிங்கங்களையும் தரிசிக்க சைக்களில் சாது, சன்னியாசி, அகோரி ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் குருவாயூரில் வழிபாட்டை நிறைவு செய்து, கோவைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் கோவையில் தொடர்ந்து வெள்ளிங்கிரி மலைப்பயணம் மேற்கொள்கின்றனர். பன்னாரி சென்று அங்கிருந்து சாம்ராஜ்நகர் செல்கின்றனர்.
நாடு முழுக்க சனதான தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் ,பசுவதை தர்மம் , காசி மதுரா கோவில் கள் கட்டப்பட வேண்டும். தமிழகத்தில் சனாதன தர்மம் குறித்து தவறான புரிதல்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும். சனாதன தர்மம் என்பது இந்துக்களின் தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்களின் தர்மம். மனுநீதிசோழன் நிலைநாட்டியது தான் சனாதன தர்மம் இதை மக்களுக்கு புரிய வைக்க இந்துமக்கள் கட்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அர்ஜுன் சம்பத்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE