சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கொந்தளித்த எடியூரப்பா!

Added : டிச 10, 2020
Share
Advertisement
கொந்தளித்த எடியூரப்பா!'மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரை, 24 மணி நேரமும் பயத்திலேயே வைத்திருக்கலாமா...' என, கர்நாடக மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவை பற்றி, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம், ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர், எதிர்க்கட்சியினர். சமீப காலமாகவே, எடியூரப்பாவுக்கும், பா.ஜ., மேலிடத்துக்குமான உறவில் விரிசல் நிலவுகிறது. கர்நாடகா,

 அக்கம் பக்கம்

கொந்தளித்த எடியூரப்பா!

'மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரை, 24 மணி நேரமும் பயத்திலேயே வைத்திருக்கலாமா...' என, கர்நாடக மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவை பற்றி, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம், ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர், எதிர்க்கட்சியினர். சமீப காலமாகவே, எடியூரப்பாவுக்கும், பா.ஜ., மேலிடத்துக்குமான உறவில் விரிசல் நிலவுகிறது. கர்நாடகா, பா.ஜ.,வில் உள்ள எடியூரப்பாவின் அதிருப்தி கோஷ்டியினர், தொடர்ந்து, 'வத்தி' வைப்பதால், அவரது முதல்வர் பதவிக்கு மேல், கத்தி தொங்குகிறது. இதனால், 'எடியூரப்பாவிடமிருந்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முதல்வர் பதவி பறிக்கப்படலாம்' என, கடந்த ஓர் ஆண்டாகவே பேசப்பட்டு வருகிறது.நிம்மதியும் போய், துாக்கமும் போய், அழுது புலம்பி வந்த எடியூரப்பா, இப்போது பொங்கி எழ முடிவு செய்துள்ளார். எடியூரப்பா, கர்நாடகாவில் அதிகம் வசிக்கும், செல்வாக்கு மிக்க லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். பதவியை பாதுகாக்க, தன் சமூகத்தை கேடயமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்.
'அதிருப்தியாளர்களின் பேச்சைக் கேட்டு, கட்சி மேலிடம் என்னிடமிருந்து பதவியை பறித்து விடுமா... என் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இதை வேடிக்கை பார்ப்பரா...' என, தன் குமுறலை, மற்றவர்கள் வாயிலாக கசிய விட்டுள்ளார்.இதை சற்றும் எதிர்பார்க்காத, எடியூரப்பா அதிருப்தியாளர்கள், 'பெரிய மனிதர் என்று கூட பாராமல், ஓவராக, அவரை பீதியாக்குள்ளாக்கி விட்டோம் போலும்... அதனால் தான், கொதித்து எழுந்து விட்டார் போலிருக்கிறது' என, முணுமுணுக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X