ஜனநாயகத்தை மீட்க போராட்டம்!
விவசாயிகளின் போராட்டம், நாட்டின் ஜனநாயக மாண்பை மீட்டெடுப்பதற்கான ஒரு இயக்கம். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான விவசாயிகளின் போராட்டத்துடன், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், உணர்வுப் பூர்வமாக இணைவதற்கு இதுவே காரணம்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
மனித உரிமை பாதுகாப்பு!
நாட்டில், ஜனநாயகத்தையும், மக்களின் குரலையும் அழிக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. ஆனால், மனித உரிமைகளை பாதுகாக்க, மேற்கு வங்க அரசு கடமைப்பட்டுள்ளது. மாநிலத்தில், 19 மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
பொருளாதாரம் முன்னேறாது!
நம் பொருளாதாரம், விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாதவரை, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது. ஆனால், நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில், வேளாண் சட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது.
கமல்நாத்
மூத்த தலைவர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE