வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் பெற்ற வெற்றிக்கு எதிராக, அதிபர் டொனால்டு டிரம்ப், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் வெற்றிபெற்றார். பெரும்பான்மைக்கு, 270, 'எலக்டோரல் காலேஜ்' ஓட்டுகளே தேவையான நிலையில், 306 ஓட்டுகளை தன் வசமாக்கி, பைடன் அமோக வெற்றிபெற்றார். பைடனும், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிசும், ஜன., 20ல் பதவியேற்க உள்ளனர்.
![]()
|
இதற்கிடையே, அதிபர் டொனால்டு டிரம்ப், ஜார்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில், ஜோ பைடன் பெற்ற வெற்றியை செல்லாததாக அறிவிக்கக்கோரி, டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து, அதிபர் டொனால்டு டிரம்பும், இதே வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவருடன், 17 மாகாணங்களைச் சேர்ந்த, குடியரசு கட்சியின் அட்டர்னி ஜெனரல்களும் முறையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE