ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு

Updated : டிச 11, 2020 | Added : டிச 11, 2020 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை : ரஜினி கட்சி பெயர், இன்று(டிச.,11) டில்லியில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்று உள்ளனர்.கொரோனாவால் முடங்கிய, ரஜினியின் அரசியல் பிரவேசம், தற்போது சூடுபிடித்து உள்ளது. சென்னையில் சில நாட்களாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், அவர்
Delhi,Rajini,Rajinikanth,டில்லி,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை : ரஜினி கட்சி பெயர், இன்று(டிச.,11) டில்லியில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்று உள்ளனர்.

கொரோனாவால் முடங்கிய, ரஜினியின் அரசியல் பிரவேசம், தற்போது சூடுபிடித்து உள்ளது. சென்னையில் சில நாட்களாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், அவர் ஆலோசித்து வருகிறார். அதன் விளைவாக, கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் ஒன்றை, ரஜினி தேர்வு செய்துள்ளார். அந்த பெயரை, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில், இன்று பதிவு செய்ய உள்ளனர். இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்றுள்ளனர். இதையடுத்து, கட்சி கொடி மற்றும் மாநில நிர்வாகிகளையும் தேர்வு செய்ய உள்ளனர். கட்சி கொடியில், வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, கட்சி பெயரை அறிவித்த நாள் முதல், ஒவ்வொரு தெருவிலும், கட்சியின் பெயரை, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, தனி குழுக்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பணம், பதவிக்காக இருப்பவர்களை நீக்க, ரஜினி முடிவெடுத்துள்ளார். அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது. அதனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு, தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு போலீசாருக்கு, தினமும் ரஜினி வீட்டில் இருந்தே, உணவு மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது.மேலும், யார் யார் வருகின்றனர் என்பதை கண்காணிக்க, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


latest tamil news




ஜெ., மறைவுக்கு பின் களையிழந்த போயஸ் கார்டன், தற்போது ரஜினியால், மீண்டும் பரபரப்பாகி உள்ளது. ரஜினியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை அவரது ரசிகர்கள், யாகம், சிறப்பு பூஜை நடத்தவும், அன்னதானம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில், இன்று காலடிப்பேட்டில் உதவிகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
15-டிச-202017:03:29 IST Report Abuse
Loganathaiyyan சொறிவாளின் "ஆம் ஆத்மி பார்ட்டி" "சாதாரண மக்கள் கட்சி" வழியில் "மக்கள் சேவை கட்சி" இப்படித்தான் எண்ணத்தோணுகின்றது. ஆம் ஆத்மீ பார்ட்டியின் வண்டவாளம் இப்போ தண்டவாளத்தில் எல்லா விஷயங்களிலும்
Rate this:
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
11-டிச-202018:51:53 IST Report Abuse
R.Balasubramanian நடு நிலையான கருத்து கொண்ட வாசகர்கள் தான் நம்ம பத்திரிகைக்கு தேவை. கிழவர் கட்டுமரம் தொண்ணுறு வயதில் முதல்வர் ஆகலாம், ரஜினி ஆக கூடாதா?
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
11-டிச-202021:11:51 IST Report Abuse
M.Selvam..இவ்வளவு நாள் செவ்வாய் கிரகம் போய் இருந்தீர்களா?...
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
14-டிச-202000:36:18 IST Report Abuse
Saiபாத்தீங்களா எல்லாத்துக்கும் முன்னுதாரணமான கலைஞரைத்தான் சொல்றீங்க நன்றி பாலு...
Rate this:
Cancel
RAJAPPA - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-202018:45:13 IST Report Abuse
RAJAPPA தி மு க ரஜினி தனியே போட்டியிட்டு தி மு க எதிர் வாக்குகளை பிரிப்பர் என்ற எண்ணத்தில் இருக்கிறது . அது தன நடக்கப்போகிறது. ரஜினி தமிழகத்தின் சிரஞ்சீவி ஆகலாம் . ஆட்சிக்குவரமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X