2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தேர்வு

Updated : டிச 11, 2020 | Added : டிச 11, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக, அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிசை , டைம் நாளிதழ் தேர்வு செய்துள்ளது.1927 ம் ஆண்டு முதல் செய்திகளில் அதிகம் இடம்பெறும் நபர்களை தேர்வு செய்து, அமெரிக்காவின் டைம் நாளிதழ் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதில், 2020ம் ஆண்டிற்கான சிறந்த நபர்களாக, அமெரிக்க அதிபராக பதவியேற்க
சிறந்த நபர்கள், ஜோ பைடன், கமலா ஹாரிஸ், டைம்நாளிதழ்,

வாஷிங்டன்: 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக, அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிசை , டைம் நாளிதழ் தேர்வு செய்துள்ளது.

1927 ம் ஆண்டு முதல் செய்திகளில் அதிகம் இடம்பெறும் நபர்களை தேர்வு செய்து, அமெரிக்காவின் டைம் நாளிதழ் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதில், 2020ம் ஆண்டிற்கான சிறந்த நபர்களாக, அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் தேர்வு செய்துள்ள டைம் நாளிதழ், அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளது.


latest tamil news



இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்கள் பட்டியலில், அதிபர் டிரம்ப், முன்கள சுகாதார பணியாளர்கள், அந்தோணி பவுசி, இனவெறிக்கு எதிரான இயக்கம் ஆகியவை இருந்தனர். அவர்களை பின்னுக்கு தள்ளி பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-202016:32:49 IST Report Abuse
Ganesan Madurai வெட்கமாயில்ல இடதுசாரிகளுக்கு?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-டிச-202016:10:24 IST Report Abuse
வெகுளி இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்கள் சுகாதார பணியாளர்கள் ..... அரசியல்வாதிகளல்ல....
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
11-டிச-202016:03:11 IST Report Abuse
ShivRam ShivShyam யப்பா .. இன்னும் பதவி கூட ஏற்கல .. அதுக்குள்ள எப்படி சிறந்த நபர் .. உலக மகா கோல்மால் டா சாமி ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X