அறிவியல் ஆயிரம்
காலையில் ஒரு 'காபி'
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது பலருக்கும் வழக்கமான ஒன்று. இந்நிலையில் காலையில் 'காபி' குடித்து விட்டு நடைபயிற்சி, சைக்கிளிங் போன்ற பயிற்சியில் ஈடுபடுவது செயல் திறனை அதிகப்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள கோவென்ட்ரி பல்கலை, சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்வோர் 46 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில் பயிற்சிக்கு முன்பு 'காபி' அருந்தும் பழக்கம் உள்ளவர்களிடம் கூடுதல் செயல்திறன் இருப்பது கண்டறியப்பட்டது. பிரிட்டனில் சராசரியாக ஒரு நபர், ஒருநாளைக்கு இருமுறை 'காபி' குடிக்கின்றனர்.
தகவல் சுரங்கம்
இடம் மாறும் தீவு
உலகில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவை ஏதாவது ஒரு நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கும். ஆனால் உலகில் ஒரு தீவு, ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாடு மாறுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்--- ஸ்பெயின் இடையே இயற்கையான எல்லையாக பீடாசோவ் ஆறு உள்ளது. இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பிரித்து பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் நடுவில் பீசன்ட் தீவு உள்ளது. இது பிப்.1 ---- ஜூலை 31 வரை ஆறு மாதம் பிரான்சிடமும், ஆக. 1 - --- ஜன., 31 வரை ஆறு மாதம் ஸ்பெயினிடமும் மாற்றப்படுகிறது. இதன் அளவு 660 அடி நீளம், 130 அடி அகலம் கொண்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE