சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

உழைத்து சாப்பிடணும்!

Added : டிச 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
உழைத்து சாப்பிடணும்!கணவருக்கு, 80; மனைவிக்கு, 74 வயதாகும் நிலையிலும், தினமும் உழைத்து, தங்கள் சொந்தக் காலில் நிற்பது குறித்து, அரியலுார் மாவட்டம், தா.பழூர், தோப்பு தெருவைச் சேர்ந்த குஞ்சிதபாதம் - வசந்தா தம்பதியில் குஞ்சிதபாதம்: எங்களுக்கு, கல்யாணம் ஆகி, ௫௫ ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. ஆரம்பத்தில் நான், விவசாயம் தான் பார்த்தேன். அதன் பின், மளிகைக்கடை, பால் வியாபாரம்

சொல்கிறார்கள்

உழைத்து சாப்பிடணும்!

கணவருக்கு, 80; மனைவிக்கு, 74 வயதாகும் நிலையிலும், தினமும் உழைத்து, தங்கள் சொந்தக் காலில் நிற்பது குறித்து, அரியலுார் மாவட்டம், தா.பழூர், தோப்பு தெருவைச் சேர்ந்த குஞ்சிதபாதம் - வசந்தா தம்பதியில் குஞ்சிதபாதம்: எங்களுக்கு, கல்யாணம் ஆகி, ௫௫ ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. ஆரம்பத்தில் நான், விவசாயம் தான் பார்த்தேன். அதன் பின், மளிகைக்கடை, பால் வியாபாரம் செய்தேன். எதுவும், சரிப்பட்டு வரலை.
இந்த பகுதியில் பனை மரங்கள் அதிகம்; பனங்குருத்து நிறைய கிடைக்கும். அந்த மட்டைகளை வெட்டி, விசிறி செய்து, வாழ்க்கை நடத்தலாம் என எண்ணி, வேலையை துவக்கினோம். ஆண்டுகள் பலவாக இந்த தொழில் தான் எங்களை காப்பாற்றுகிறது.இந்த தொழிலில், மூலதனம் எதுவும் போட வேண்டிய தேவையில்லை; உடல் உழைப்பு மட்டும் தான். அதனால், இன்னிக்கு வரைக்கும், இந்த தொழிலை மட்டுமே செய்து, நாங்கள் இருவரும், இந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.பன மட்டையை தேடி, தினமும், 10 கி.மீ., வரை, சைக்கிளில் செல்வேன். மட்டைகளை வெட்டி எடுத்து வருவேன். சில சமயங்களில், மனைவி வசந்தாவும் கூட வரும்.
வெட்டிய மட்டைகளில் தேவையில்லாத பகுதிகளை கழித்து விட்டு, காய வைத்து, மட்டைக்கு மேலே பாரம் ஏத்தி வைத்து, பாடம் செய்வோம். அதன் பின், ஒரே அளவில் நீளமாக வெட்டி காய வைப்போம். அந்த ஓலை மேலே, பச்சை, சிகப்பு, நீலம் என வண்ணங்களை, வசந்தா வரையும். ஊசியில் நுாலை கோர்த்து, விசிறியின் ஓரங்களை தைத்து, சைக்கிளில் ஏற்றி, வியாபாரத்திற்கு செல்வேன்.கும்பகோணம், அரியலுார், விருத்தாசலம், ஜெயங்கொண்டம் என, பல ஊர்களுக்கும் செல்வேன்.ஒரு விசிறியை, மொத்த விலையில், 15 ரூபாய்க்கும், சில்லரை விலையில், 20ரூபாய்க்கும் விற்பேன். தினமும், 300 ரூபாய் கிடைக்கும்; அது போதும். வீட்டு வாடகை, மாதம் 300 ரூபாய். ரேஷனில் பொருட்கள் வாங்கிக் கொள்வோம். மாதம், 15 நாட்கள் வேலைக்கு போனால் போதும். குளிர் நேரங்களில், விசிறி அறவே விற்காது. அந்த நேரங்களில் சற்று தடுமாற்றமாகத் தான் இருக்கும்.எனினும், அதற்காக சோர்ந்து போவதில்லை. எனக்கு அவள்; அவளுக்கு நான் என, நாட்களை சந்தோஷமாக கழித்து வருகிறோம். உடல் நோவு என, மருத்துவமனைக்கு போனதே இல்லை.உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியம் தான், இந்த வயது வரை எங்களை இயங்க வைக்கிறது. ஆண்டவன் எங்களுக்கு காசு, பணத்தை கொடுக்காவிட்டாலும், உடலுக்கு எந்த நோயையும் கொடுக்கவில்லை. அதனால், கடைசி வரை, இப்படியே காலத்தை ஓட்டிடலாம்னு நினைக்கிறேன்!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-டிச-202021:12:27 IST Report Abuse
Bhaskaran Ulaiththu vaalum ungal paatham panivom
Rate this:
Cancel
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
12-டிச-202007:19:10 IST Report Abuse
sundaram sadagopan வேலை இல்லை, வேலை இல்லை என பாரத பிரதமரை சாடும் பட்டதாரிகள் இவர்களை பார்த்தாவது திருந்தட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X