சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருமானமின்றி தொழிலாளர்கள் சிரமம்

Added : டிச 11, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் மண் பற்றாக்குறை, தொடர் மழையால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக செங்கல் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டு, காளவாசல் தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் அருகே காவனுார், கார்குடி, வன்னிக்குடி ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சேம்பர்கள், சிறிய காளவாசல்கள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் நுாற்றுக் கணக்கான

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் மண் பற்றாக்குறை, தொடர் மழையால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக செங்கல் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டு, காளவாசல் தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் அருகே காவனுார், கார்குடி, வன்னிக்குடி ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சேம்பர்கள், சிறிய காளவாசல்கள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் நுாற்றுக் கணக்கான தொழிலாளர்கள் காளவாசல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல்கள் மாவட்ட முழுவதும் கட்டுமான பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஏற்கனவே மண் கிடைக்காமல் செங்கல் தயாரிக்கும் பணி மந்தமாக நடக்கிறது. கடந்த அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் காளவாசல் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு பெயரளவில் செங்கல் தயாரிக்கும் பணி நடந்தது. இந்த நிலைமையில் நிவர், புரெவி புயல் மழைகாரணமாக காவனுார், கார்குடி, வன்னிக்குடி பகுதிகளில் சேம்பர், காளவாசல் பணிகள் முழுமையாக முடங்கியுள்ளன. ஒருமாதத்திற்கும் மேலாக பணிகள் நடைபெறாததால் தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல் காளவாசல் உரிமையாளர் கேசவன் கூறுகையில்,‛ கொரோனா ஊரடங்கு காலம், மண் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் செங்கல் தயாரிப்பு குறைந்துள்ளது. வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்கிறோம், தற்போது மழைக்காலம் என்பதால் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையில்லை, செங்கல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது, ரூ. பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது,'என்றார்.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X