பரமக்குடி : நயினார்கோவில் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட செயல்பாடுகளை மாநில வேளாண் ஆலோசகர்(பல்துறை திட்ட அலகு) ஷாஜகான் பார்வையிட்டார்.
2020--21ல்பாண்டியூர், வல்லம் கிராமங்களில் அமைக்கப் பட்ட நெல் செயல் விளக்கதிட்டங்கள், நெற் பயிர் வரிசை விதைப்பு பரவலாக்கப்பட்டபகுதியின் செயல்பாடுகள் குறித்து விளக்கப் பட்டது.மேலும் வல்லம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுஅதில் ஒற்றை சாளர அறிவு தகவல் மையம் நடந்துவருவதை பாராட்டினார். தொடர்ந்து அக்கிர மேசியில் கடலை செயல் விளக்க திடல் கள் அமைக்கும் விவசா யிகளுக்கு இடுபொருள் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE