பேதுல்:களவு போன பொருட்களை ஒப்படைக்கும்படி, கிராம மக்கள், திருடனுக்கு எழுதிய கடிதம், சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தில், பேதுல் மாவட்டம், மல்காபூர் கிராமத்தில், கல்லறையில் இருந்த பம்பு செட், பித்தளை குடிநீர் குழாய், பைப் உள்ளிட்டவற்றை, யாரோ திருடிச் சென்று விட்டனர். அவற்றை ஒப்படைக்கும்படி, கிராம மக்கள் கடிதம் எழுதி, அனைத்து வீட்டுச் சுவர்களிலும் ஒட்டியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பிரியமான திருடரே... எடுத்ததை ஒப்படைத்து விடுவது நல்லது. ஏனெனில், ஒரு நாள் நீயும் கல்லறைக்கு வந்தாக வேண்டும். அப்போது, உனக்கு ஈமச் சடங்குகள் செய்யக் கூட தண்ணீர் கிடைக்காது.இறந்தோர் நினைவாக கல்லறைக்கு வருவோர், மரக்கன்றுகள் நடுகின்றனர்; அவற்றுக்கு தற்போது தண்ணீர் ஊற்ற முடியவில்லை. செடிகள் அழிந்தால், உன் மரணத்திற்கு வரும், சொந்த பந்தங்கள் நிழலில் நிற்க மரங்கள் இருக்காது. எனவே, ஊர் நலன் பாராது, தன்னலம் கருதியாவது, திருடிய பொருட்களை திருப்பி தந்து விடு.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE