வாஷிங்டன்:அமெரிக்காவில், 'பைசர்' நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த, அரசு ஆலோசனை குழு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த, 'பயோ என்டெக்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கிஉள்ளன.இதை அவசரகாலத்துக்கு பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையின், தடுப்பூசி மற்றும் உயிரியல் பொருட்களுக்கான ஆலோசனை குழு, அனுமதி அளித்து உள்ளது.
நேற்று முன்தினம் நடந்த எட்டு மணி நேர ஆலோசனை கூட்டத்துக்கு பின், இந்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தடுப்பூசியில் சில பக்கவிளைவுகள் இருந்தாலும், அது ஏற்படுத்த போகும் பலனை கருத்தில் வைத்து, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இதன் பின், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும். அந்த அனுமதி, விரைவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பஹ்ரைனில் இலவச தடுப்பூசிஅமெரிக்காவின் பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, மத்திய கிழக்கு நாடான, பஹ்ரைன் சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்நிலையில், 'பஹ்ரைனில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்' என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்க, திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, மேற்காசிய நாடான, சவுதி அரேபிய அரசும், நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE