ஆப்கனுடன் வர்த்தக போக்குவரத்து தடையை நீக்க இந்தியா கோரிக்கை

Added : டிச 11, 2020
Share
Advertisement
நியூயார்க்:'தெற்காசிய நாடான ஆப்கனில், பயங்கரவாதம் மறைந்து, அமைதியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்' என, ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.இந்தியா வழி மொழிந்த இந்த தீர்மானம், 130 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தீர்மானத்தை ஆதரித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் துணை பிரதிநிதி நாகராஜ் நாயுடு பேசியதாவது:ஆப்கனில்,

நியூயார்க்:'தெற்காசிய நாடான ஆப்கனில், பயங்கரவாதம் மறைந்து, அமைதியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்' என, ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியா வழி மொழிந்த இந்த தீர்மானம், 130 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தீர்மானத்தை ஆதரித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் துணை பிரதிநிதி நாகராஜ் நாயுடு பேசியதாவது:ஆப்கனில், பயங்கரவாதம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து தீர்வு காண, இந்த தீர்மானம் வகை செய்கிறது. ஆப்கன் - இந்தியா இடையே சரக்கு போக்குவரத்துக்கு, செயற்கையாகவும், அரசியல் ரீதியிலும் தடைகள் உள்ளன. இந்த தடைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X