புவனகிரி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் சார்பில் துணை கிளை நிறுவனம் துவக்க விழா புவனகிரி ராகவேந்திரா கோவில் எதிரில் நடந்தது.
வேலுார் கோட்ட மேலாளர் சரவணன் ரமேஷ் தலைமை தாங்கினார். சிதம்பரம் கிளை முதுநிலை மேலாளர் அசோக் குமார் வரவேற்றார். வேலுார் கோட்ட வணிக மேலாளர் வெங்கட கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.ஆயுள் காப்பீட்டு கழக தென்மண்டல மேலாளர் கதிரேசன் பங்கேற்று, புவனகிரியில் புதிய கிளை அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். வேலுார் கோட்ட அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முதன்மை காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். புவனகிரி துணை கிளை மேலாளர்(பொறுப்பு) இளங்கோ நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE