இந்திய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Added : டிச 11, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவில், 'எச் - 1பி' விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், வேலையின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 'எச் - 1பி விசா' க்களை, இந்த ஆண்டு இறுதி வரை வினியோகிக்க தடை

வாஷிங்டன்:அமெரிக்காவில், 'எச் - 1பி' விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், வேலையின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 'எச் - 1பி விசா' க்களை, இந்த ஆண்டு இறுதி வரை வினியோகிக்க தடை விதித்து, அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். புதிதாக விண்ணப்பிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், எச் - 1பி விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின், 15 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 'டெக் மஹிந்திரா' நிறுவனத்தில், 30 சதவீதம்; எல் அண்டு டி நிறுவனத்தில், 26 சதவீதம்; இன்போசிஸ் நிறுவனத்தில், 58 சதவீதம்; காக்னிசன்ட் நிறுவனத்தில், 48 சதவீத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எனினும், 'அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக்' போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களில், 10 சதவீதத்திற்கும் குறைவான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X