அதிமுக- திமுக - காங்.,கிலிருந்து தாவ தயார்!

Updated : டிச 12, 2020 | Added : டிச 11, 2020 | கருத்துகள் (156)
Advertisement
அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., கட்சிகளில் இருந்து, பல்வேறு நிர்வாகிகள், ரஜினி பக்கம் தாவத் தயாராகி வருகின்றனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த, 'சிட்டிங்' அமைச்சர், மூத்த தலைவர்; தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர், பிரபல வழக்கறிஞர் மற்றும் காங்கிரசை சேர்ந்த, சிட்டிங் எம்.பி., என, ஐந்து முக்கிய தலைவர்களும் அணி மாறுகின்றனர்.'அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தில், சரியாக வருவேன்' என, பல
ADMK, DMK, Congress, அதிமுக, திமுக, காங்கிரஸ்

அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., கட்சிகளில் இருந்து, பல்வேறு நிர்வாகிகள், ரஜினி பக்கம் தாவத் தயாராகி வருகின்றனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த, 'சிட்டிங்' அமைச்சர், மூத்த தலைவர்; தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர், பிரபல வழக்கறிஞர் மற்றும் காங்கிரசை சேர்ந்த, சிட்டிங் எம்.பி., என, ஐந்து முக்கிய தலைவர்களும் அணி மாறுகின்றனர்.

'அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தில், சரியாக வருவேன்' என, பல ஆண்டுகளாக கூறி வந்த, நடிகர் ரஜினி, அடுத்த மாதம் கட்சி துவக்கப் போவதாக அறிவித்துள்ளார். கட்சி அறிவிப்பு தேதி, இம்மாதம், 31ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு, தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.


வடிவமைக்கும் பணி


கட்சி துவக்குவதற்கான பணிகளை கவனிப்பதற்காக, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக, பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய அர்ஜுனமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இது தவிர, கட்சியின் கொள்கை, கொடி போன்றவற்றை வடிவமைக்கும் பணியில், வட மாநிலங்களில் பணியாற்றும், தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழகத்தில் உள்ள ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியின் பெயரை, தேர்தல் கமிஷனில், பதிவு செய்யவும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தில், 21 பேர் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது.

ஏற்கனவே, 45 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில், முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியலை கைவசம் வைத்துள்ளனர். மேலும், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டுச் சாவடிகளில், முகவர்கள் நியமிக்கும் பணியை, விரைவாக முடிக்கும்படி, மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி கட்சி துவக்கப் போவதாக அறிவித்ததும், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. அந்த கட்சிகளில், கட்சி தலைமை மீது, அதிருப்தியில் உள்ளவர்களில் பலர், ரஜினி பக்கம் வர தயாராகி வருகின்றனர்; ரஜினி தரப்பினருடன், ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, மாற்று கட்சியில் உள்ள, முக்கிய பிரமுகர்களும் ரகசிய பேச்சு துவக்கியுள்ளனர். இதன் பின்னணியில், எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் பலர் உள்ளனர். சென்னை முன்னாள் மேயர், முன்னாள் துணை மேயர், ரஜினி பக்கம் செல்வது உறுதியாகி உள்ளது.


பேச்சு


தற்போது, தனிக்கட்சி நடத்தி வரும், முன்னாள் எம்.பி.,யான கல்வியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் இணைய உள்ளனர்.அ.தி.மு.க., அமைச்சரவையில், தற்போது அமைச்சர்களாக உள்ள, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர், புதிய அமைச்சர், முன்னாள் ராஜ்யசபா எம்.பி., மற்றும் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்கள் இருவர் ஆகியோரிடமும், ரஜினி தரப்பில் பேச்சு நடந்துள்ளது.


திருப்பம் ஏற்படுத்தும்


தி.மு.க.,வில், பிரபல வழக்கறிஞர், தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள முன்னாள் அமைச்சர் உட்பட, பலரிடம் பேச்சு நடந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 'சிட்டிங்' எம்.பி., மற்றும் மாநில நிர்வாகிகள் சிலரும், ரஜினி தரப்புடன் பேசி வருகின்றனர்.இவர்கள் மட்டுமின்றி, தி.மு.க.,வில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களும், ரஜினி பக்கம் தாவ, ஆலோசித்து வருகின்றனர்.

புத்தாண்டில் ரஜினி கட்சி துவக்கியதும், இக்கட்சிகளில் இருந்து, பலர் அணி மாறுவர் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசியலில், வரும் புத்தாண்டு பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்கிறது, ரஜினி வட்டாரம்.

- டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-டிச-202001:42:21 IST Report Abuse
மதுரை விருமாண்டி திருடன் கிட்டே இருந்து திருடுறது தான் ஆன்மீக அரசியல்.. ஹா ஹா ஹா .. ஆன்மீக அரசியலிலே இதான் சகஜம் ப்பா ..
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
16-டிச-202022:16:45 IST Report Abuse
ocean திராவிடம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா. திரவம் சூழ்ந்த இடம் திராவிடம். இந்தியாவின் விந்திய சாத்புரா மலைக்கு தெற்கே உள்ள தெனிந்திய நில பரப்பு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது.மூன்று பக்கம் நீரிரிந்தும் வட பக்கம் அது இல்லை. அதை எப்படி திராவிடம் என்கிறீர்கள். அப்படி பார்த்தால் உலகில் கடல் முழுமையாக சூழ்ந்த நாடுகளை எல்லாம் திராவிட நாடுகள் என்றும் அதில் வசிப்பவர்களை திராவிடர்கள் என்று தானே அழைக்க வேண்டும். அவர்களிடம் போய் எங்களை போல் நீங்களும் திராவிடர் என்று சொன்னால் உதைக்க வருவார்கள். திராவிடம் என்ற வார்த்தை ஒரு ஹம் பக் வார்த்தை. வரலாறு படியுங்கள்.மந்திரம் தெரிந்திருப்பது பெரிய அறிவாளியாக்காது ஓய்.
Rate this:
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
15-டிச-202016:17:43 IST Report Abuse
Ramshanmugam Iyappan அனைவரும் அலை கடல் என் திரண்டு ஆதரவு தாருங்கள், ரஜினி அவர்களின் கரங்களை வலுப்படுத்துவது நமது கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X