கடலுார் : திருநங்கைகள் குறித்த மக்களின் மனோபாவம் மாற வேண்டும் என, ரவிக்குமார் எம்.பி., பேசினார்.
புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் விழுப்புரம், கடலுார் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில், 'மனித உரிமைகளும் மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளும்' என்ற தலைப்பில் காணொலி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இளையோர் மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் சுமார் 150 பேர் பங்கேற்றனர்.கடலுார் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராஜீஸ்குமார் வரவேற்றார். சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணதுரை தலைமையுரையாற்றினார்.
விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவரின் நலனுக்காக கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மாற்றுப் பாலினத்தவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைத்துள்ளது.ஆனால் சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டும். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்காகப் பாடுபட வேண்டும் என, தெரிவித்தார்.
கடலுார் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் சிவக்குமார் பேசினர். புதுச்சேரி சகோதரன் அமைப்பின் தலைவர் ஷீத்தல் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்ட நேரு யுவக்கேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் நன்றி கூறினார். கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE