சிறுபாக்கம் : மங்களூர் தாகூர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை பெற்றதற்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டினர்.
சிறுபாக்கம் அடுத்த மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை மகள் துர்காதேவி. இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மருத்துவர் சேர்க்கை பெற்றுள்ளார். இவரை மங்களூர் தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் சால்வை அணிவித்து பாராட்டினார். அவரது மருத்துவ படிப்பிற்கான முதல் தவணை கட்டண காசோலை வழங்கினார். தலைமை ஆசிரியர் விஜயசுந்தரி உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE