10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய பனப்பாக்கம் ஏரி

Added : டிச 11, 2020
Share
Advertisement
பொன்னேரி: கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின், பனப்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளதால், விவசாயிகள் தொடர் முயற்சிக்கு, பலன் கிடைத்து உள்ளது.பொன்னேரி அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாசன ஏரி, 250 ஏக்கர் பரப்பு உடையது. கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து, குமரஞ்சேரி வழியாக, ஏரிக்கு நீர்வரத்து உள்ள கால்வாயை தனி நபர்கள் சிலர், ஆக்கிரமித்து

பொன்னேரி: கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின், பனப்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளதால், விவசாயிகள் தொடர் முயற்சிக்கு, பலன் கிடைத்து உள்ளது.பொன்னேரி அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாசன ஏரி, 250 ஏக்கர் பரப்பு உடையது. கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து, குமரஞ்சேரி வழியாக, ஏரிக்கு நீர்வரத்து உள்ள கால்வாயை தனி நபர்கள் சிலர், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.இதனால், மழைக் காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல், 10 ஆண்டுகளாக வறண்டு இருந்தது. கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து, விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர்.இதையடுத்து, மேற்கண்ட ஏரிக்கு வரும் கால்வாயில் இருந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, துார் வாரி சீரமைக்கப்பட்டது.இந்நிலையில், சமீபத்திய தொடர் மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது.ஏரி முழுமையாக நிரம்பி, உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது. விவசாயிகளின் தொடர் முயற்சியால், 10 ஆண்டுகளுக்கு பின், பனப்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X