தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு; 28 ஆயிரத்து 624 பேர் எழுதுகின்றனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு; 28 ஆயிரத்து 624 பேர் எழுதுகின்றனர்

Added : டிச 11, 2020
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் நாளை நடக்கும் தேர்வில் 28 ஆயிரத்து 624 பேர் பங்கேற்க உள்ளனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், காவல்துறை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகியோருக்கான எழுத்து தேர்வு நாளை 12ம் தேதி காலை 11:00 மணி முதல் 12;20 மணி வரை நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் 18 மையங்களில் 28

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் நாளை நடக்கும் தேர்வில் 28 ஆயிரத்து 624 பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், காவல்துறை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகியோருக்கான எழுத்து தேர்வு நாளை 12ம் தேதி காலை 11:00 மணி முதல் 12;20 மணி வரை நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் 18 மையங்களில் 28 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் காலை 8:30 மணி முதல் அனுமதிக்கப்படுவர். மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வரக்கூடாது.தேர்வு எழுத தேர்வு அட்டை கொண்டு வரவேண்டும். ஹால்டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தை ஒட்டி, ஏ அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.பென்சில் பயன்படுத்தக் கூடாது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X