பேரம்பாக்கம்: பேரம்பாக்கத்தில், கூவம் ஆற்றில் வழிந்தோடிய மழை நீரை, பொதுமக்கள் கண்டு களித்தனர்.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில், கூவம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில், 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், தரைப்பாலம் உடைந்து சேதமானது. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளாக, தண்ணீரின்றி வறண்டு கிடந்தது.இந்நிலையில், நிவர், புரெவி புயல் மழையால், நீர்வரத்து காரணமாக, பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆற்றுக்கு, நீர் திறந்து விடப்பட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, பேரம்பாக்கம் பகுதி கூவம் ஆற்றில், மழை நீர் வழிந்தோடியது. இதை, பொதுமக்கள் கண்டு களித்தனர்.இதேபோல், கூவம் ஏரியில் வழிந்தோடும் மழை நீரும், இருளஞ்சேரி, கொண்டஞ்சேரி வழியாக சத்தரை பகுதி கூவம் ஆற்றில் சேகரமாகிறது.கூவம் ஆற்றில், பிஞ்சிவாக்கம் பகுதியில், 7.50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணையில், மழை நீர் வழிந்தோடுகிறது,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE